/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
அரையிறுதியில் செல்சி: கிளப் உலக கால்பந்தில்
/
அரையிறுதியில் செல்சி: கிளப் உலக கால்பந்தில்
ADDED : ஜூலை 05, 2025 10:54 PM

பிலாடெல்பியா: கிளப் உலக கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு செல்சி அணி முன்னேறியது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. பிலாடெல்பியாவில் நடந்த காலிறுதியில் செல்சி (இங்கிலாந்து), பால்மெய்ராஸ் (பிரேசில்) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் பால்மர் ஒரு கோல் அடித்து கைகொடுக்க, முதல் பாதி முடிவில் செல்சி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பால்மெய்ராஸ் அணிக்கு 54வது நிமிடத்தில் எஸ்டெவாவோ ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலை அடைந்தது. பின், 84வது நிமிடத்தில் பால்மெய்ராஸ் அணி கோல்கீப்பர் வெவர்டன் 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் செல்சி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆர்லாண்டோவில் நடந்த மற்றொரு காலிறுதியில் புளுமினென்ஸ் (பிரேசில்), அல்-ஹிலால் (சவுதி அரேபியா) அணிகள் மோதின. இதில் புளுமினென்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அரையிறுதியில் (ஜூலை 8) செல்சி, புளுமினென்ஸ் அணிகள் மோதுகின்றன.