/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
செல்சி அணி வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
/
செல்சி அணி வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
ADDED : பிப் 26, 2025 09:43 PM

லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணி 4-0 என, சவுத்தாம்டனை வீழ்த்தியது.
இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் செல்சி, சவுத்தாம்டன் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய செல்சி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி அணிக்கு கிறிஸ்டோபர் குன்கு (24வது நிமிடம்), பெட்ரோ நெட்டோ (36வது), லெவி கோல்வில் (44வது), மார்க் குகுரெல்லா (78வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இது, செல்சி அணியின் 13வது வெற்றியானது.
மற்றொரு லீக் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்டன் வில்லா அணியை வீழ்த்தியது. பிரைட்டன் அணி 2-1 என போர்ன்மவுத் அணியை வென்றது. புல்ஹாம் அணி 2-1 என வால்வர்ஹாம்டன் அணியை தோற்கடித்தது.
இதுவரை நடந்த போட்டிகளில் முடிவில் லிவர்பூல் அணி 27 போட்டியில், 19 வெற்றி, 7 'டிரா', ஒரு தோல்வி என 64 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த ஐந்து இடங்களில் ஆர்சனல் (53 புள்ளி), நாட்டிங்கம் பாரஸ்ட் (47), செல்சி (46), மான்செஸ்டர் சிட்டி (44), நியூகேசில் யுனைடெட் (44) அணிகள் உள்ளன. மான்செஸ்டர் யுனைடெட் அணி (30 புள்ளி) 15வது இடத்தில் உள்ளது.