/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
'பிளே ஆப்' சுற்றில் சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் முன்னேற்றம்
/
'பிளே ஆப்' சுற்றில் சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் முன்னேற்றம்
'பிளே ஆப்' சுற்றில் சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் முன்னேற்றம்
'பிளே ஆப்' சுற்றில் சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் முன்னேற்றம்
ADDED : ஏப் 10, 2024 10:46 PM

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய ஈஸ்ட் பெங்கால் அணி 1-4 என பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 10வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. பஞ்சாப், ஈஸ்ட் பெங்கால் அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதின. டில்லியில் நடந்த இந்த போட்டியின் 19வது நிமிடத்தில் பஞ்சாப் வீரர் வில்மர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 25வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் சயான் பானர்ஜி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின் எழுச்சி கண்ட பஞ்சாப் அணிக்கு 43வது நிமிடத்தில் மதிஹ் தலால் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் பஞ்சாப் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணிக்கு வில்மர் ஜோர்டான் (62வது நிமிடம்), லுாகா மஜ்சென் (70வது) தலா ஒரு கோல் அடித்து 4-1 என வலுவான முன்னிலை பெற்றுத்தந்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய ஈஸ்ட் பெங்கால் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை தகுதி
மொத்தம் விளையாடிய 22 போட்டியில், 6 வெற்றி, 6 'டிரா', 10 தோல்வி என 24 புள்ளிகளுடன் ஈஸ்ட் பெங்கால் அணி 7வது இடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. சென்னை அணி (21 ல் 8 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி) இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 27 புள்ளிகளுடன் 6வது இடத்தை உறுதி செய்து அரையிறுதி 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. பஞ்சாப் அணி (22ல் 6 வெற்றி, 6 'டிரா', 10 தோல்வி, 24 புள்ளி) 8வது இடம் பெற்றது.

