/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
வெற்றியுடன் துவக்கியது சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை
/
வெற்றியுடன் துவக்கியது சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை
வெற்றியுடன் துவக்கியது சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை
வெற்றியுடன் துவக்கியது சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை
ADDED : செப் 14, 2024 11:02 PM

புவனேஸ்வர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை சென்னை அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 3-2 என, ஒடிசா அணியை வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' மும்பை, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் உட்பட மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் டியாகோ மொரிசியோ ஒரு கோல் அடித்தார். இதற்கு சென்னை அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஒடிசா அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 48, 51வது நிமிடத்தில் பரூக் சவுத்தரி 2 கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய சென்னை அணிக்கு 69வது நிமிடத்தில் டேனியல் சிமா சுக்வு, தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) ஒடிசா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
ஆட்டநேர முடிவில் சென்னை அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெங்களூரு வெற்றிபெங்களூருவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் பெங்களூரு, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் 25வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.