/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
அர்ஜென்டினா அபாரம் * 'கோபா' கால்பந்தில்...
/
அர்ஜென்டினா அபாரம் * 'கோபா' கால்பந்தில்...
ADDED : ஜூன் 21, 2024 10:33 PM

அட்லாண்டா: கோபா அமெரிக்க கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என கனடாவை வீழ்த்தியது.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் அமெரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியன், உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ள அர்ஜென்டினா அணி, 48 வது இடத்திலுள்ள கனடாவை எதிர்கொண்டது. 49 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி, பந்தை சக வீரர் அலெக்சிஸ் மாக் அலிஸ்டருக்கு கொடுத்தார். இவரிடம் இருந்து பந்தை பெற்ற ஜூலியன் ஆல்வரஸ் அருமையாக கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது.
போட்டியின் 88 வது நிமிடத்தில் பந்தை சக வீரர் நிகோலஸ் ஓடமண்டிக்கு அனுப்பினார் மெஸ்சி. இதை நிகோலஸ, கோலாக மாற்ற, அர்ஜென்டினா அணி 2-0 என வெற்றி பெற்றது.
35
கோபா அமெரிக்க தொடரில் அதிக போட்டியில் களமிறங்கிய வீரரானார் மெஸ்சி (35). முன்னதாக சிலியின் செர்ஜியோ லிவிங்ஸ்டன், 34 போட்டியில் (1941-53) பங்கேற்றிருந்தார்.