ADDED : ஜூன் 27, 2026 11:48 PM

மயாமி: கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரத்யேக தங்க நிற பூட்ஸ் அணிந்து பயிற்சி மேற்கொண்டார்.
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 41. இம்முறை உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் 6 சீசனில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார். இதை கவுரவிக்கும்விதமாக 'நைக்' நிறுவனம், இவருக்காக தங்க நிற 'ஸ்கார்பியன்' பூட்ஸ் தயாரித்துள்ளது. இவரது 'ஜெர்சி' நம்பரை குறிக்கும் வகையில் 'cr7' என பொறிக்கப்பட்டுள்ளது. இது 'ஸ்பெஷல் எடிஷன் பூட்ஸ்' என்பதால், மொத்தம் 2026 ஜோடி மட்டுமே விற்பனை செய்யப்படும். கொலம்பியாவுக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது, புதிய தங்க நிற பூட்ஸ் அணிந்திருந்தார் ரொனால்டோ. வரும் போட்டிகளில் இதே பூட்ஸ் அணிந்து களமிறங்கலாம். தொடர்ந்து கோல் அடித்து தங்கம் போல ஜொலித்தால், தங்க பூட் விருதையும் ரொனால்டோ கைப்பற்றலாம்.
