/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஒலிம்பியாகோஸ் அணிக்கு கோப்பை: கான்பரன்ஸ் கால்பந்து தொடரில்
/
ஒலிம்பியாகோஸ் அணிக்கு கோப்பை: கான்பரன்ஸ் கால்பந்து தொடரில்
ஒலிம்பியாகோஸ் அணிக்கு கோப்பை: கான்பரன்ஸ் கால்பந்து தொடரில்
ஒலிம்பியாகோஸ் அணிக்கு கோப்பை: கான்பரன்ஸ் கால்பந்து தொடரில்
ADDED : மே 30, 2024 10:36 PM

ஏதென்ஸ்: ஐரோப்பா கான்பரன்ஸ் லீக் தொடரில் ஒலிம்பியாகோஸ் அணி கோப்பை வென்றது. பரபரப்பான பைனலில் பியோரன்டினா அணியை 1-0 என வீழ்த்தியது.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் ஐரோப்பா கான்பெரன்ஸ் லீக் தொடர் நடந்தது. பைனலில் ஒலிம்பியாகோஸ் (கிரீஸ்), பியோரன்டினா (இத்தாலி) கிளப் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் போராட, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கோல் அடிக்கப்படவில்லை. இதையடுத்து, போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. வீரர்கள் தொடர்ந்து போராட, 'பெனால்டி ஷூட் அவுட்' மூலம் முடிவு செய்யப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டது.
அயூப் கோ...ல்
இந்த நேரத்தில் சக வீரர் சான்டியோகோவிடம் இருந்து பந்தை பெற்ற ஒலிம்பியாகோஸ் அணியின் அயூப் எல் கபி (116வது நிமிடம்) அசத்தல் கோல் அடித்தார். இது 'ஆப்-சைடு' என்று சந்தேகம் எழ, 'வார்' தொழில்நுட்பதம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கோல் உறுதி செய்யப்பட, ஒலிம்பியாகோஸ் அணி முதல் முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.
ஒலிம்பியாகோஸ் பயிற்சியாளர் ஜோஸ் லுாயிஸ் மெண்டிலிபார் கூறுகையில்,''கோப்பை வென்றது மகிழ்ச்சி. இதை ரசிகர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.