/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கோப்பை வென்றது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
/
கோப்பை வென்றது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
கோப்பை வென்றது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
கோப்பை வென்றது மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
ADDED : மே 04, 2024 11:26 PM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் மும்பை அணி 2வது முறையாக சாம்பியன் ஆனது. பைனலில் 2-1 என மோகன் பகானை வென்றது.
கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து 10வது சீசனுக்கான பைனலில் மோகன் பகான், மும்பை சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் ஜேசன் கம்மிங்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு மும்பை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மும்பை அணிக்கு 53வது நிமிடத்தில் ஜார்ஜ் பெரேரா டயஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய மும்பை அணிக்கு 81வது நிமிடத்தில் பிபின் சிங் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய மோகன் பகான் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன் 2020-21 சீசன் பைனலில் மோகன் பகானை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றிருந்தது.
மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ. 6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த மோகன் பகான் அணிக்கு ரூ. 3 கோடி பரிசு தொகை கிடைத்தது.