/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கோப்பை வென்றது ஒடிசா * பெண்கள் கால்பந்து தொடரில்...
/
கோப்பை வென்றது ஒடிசா * பெண்கள் கால்பந்து தொடரில்...
கோப்பை வென்றது ஒடிசா * பெண்கள் கால்பந்து தொடரில்...
கோப்பை வென்றது ஒடிசா * பெண்கள் கால்பந்து தொடரில்...
ADDED : மார் 25, 2024 10:23 PM

புவனேஷ்வர்: பெண்கள் கால்பந்து லீக் தொடரில் ஒடிசா அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கால்பந்து ('டபிள்யு.பி.எல்.,) தொடர் நடந்தது. மொத்தம் 7 அணிகள் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதின. புவனேஷ்வர், கலிங்கா மைதானத்தில் நடந்த இதன் கடைசி லீக் போட்டியில் ஒடிசா, கர்நாடகாவின் கிக் ஸ்டார்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சொந்த மண்ணில் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஒடிசா அணி கோல் மழை பொழிந்தது. லிண்டா கோம் 11, 66, 77 வது நிமிடங்களில் அசத்தி, 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். பியாரி 13, 22வது நிமிடங்களில் கோல் அடித்து கைகொடுத்தார். போட்டியின் 58 வது நிமிடம் கார்த்திகா அங்கமுத்து, தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
முடிவில் ஒடிசா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 12 போட்டி முடிவில் 31 புள்ளி எடுத்து, பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பை கைப்பற்றியது. கோகுலம் கேரளா அணி (29), கிக் ஸ்டார்ட் (21), மதுரையின் சேது அணி (17) அடுத்த மூன்று இடம் பெற்றன.

