/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
வெளியேறியது போர்ச்சுகல் அணி * காலிறுதியில் பிரான்சிடம் தோல்வி
/
வெளியேறியது போர்ச்சுகல் அணி * காலிறுதியில் பிரான்சிடம் தோல்வி
வெளியேறியது போர்ச்சுகல் அணி * காலிறுதியில் பிரான்சிடம் தோல்வி
வெளியேறியது போர்ச்சுகல் அணி * காலிறுதியில் பிரான்சிடம் தோல்வி
UPDATED : ஜூலை 07, 2024 12:21 AM
ADDED : ஜூலை 06, 2024 11:12 PM

ஹம்பர்க்: யூரோ கோப்பை காலிறுதியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, பிரான்சிடம் வீழ்ந்தது.
ஜெர்மனியில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ஹம்பர்க்கில் நடந்த காலிறுதியில் உலகின் 'நம்பர்-1' பிரான்ஸ், 'நம்பர்-6' போர்ச்சுகல் அணிகள் மோதின. கேப்டன் ரொனால்டோ உள்ளிட்ட போர்ச்சுகல் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், சரியான 'பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க முடியவில்லை.
முடிவில் போட்டி நேரத்தில் (90 நிமிடம்) இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி, கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இதிலும் இரு அணி தரப்பில் யாரும் கோல் அடிக்கவில்லை.
முடிவில் போட்டி 0-0 என ஆனது. இதனால் 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன.
நழுவிய வாய்ப்பு
முதல் வாய்ப்பில் பிரான்சின் டெம்பெலே கோல் அடித்தார். போர்ச்சுகல் தரப்பில் கேப்டன் ரொனால்டோ கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என ஆனது.
* இரண்டாவது வாய்ப்பில் போபனா (பிரான்ஸ்), சில்வா (போர்ச்சுகல்) கோல் அடித்தனர் (2-2).
* அடுத்து கவுன்டே (பிரான்ஸ்) கோல் அடிக்க, போர்ச்சுகல் தரப்பில் ஜோயா பெலிக்ஸ் வீணடித்தார். பிரான்ஸ் 3-2 என முந்தியது.
* நான்காவது வாய்ப்பில் பார்கோலா (பிரான்ஸ்), மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடித்தனர் (4-3).
* ஐந்தாவது வாய்ப்பில் பிரான்சின் ஹெர்னாண்டஸ் கோல் அடிக்க, ஸ்கோர் 5-3 என ஆனது. போர்ச்சுகல் கோல் அடித்தாலும் வெல்ல முடியாது என்பதால் போட்டி முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் அணி 5-3 என வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி வெளியேறியது. அரையிறுதியில் ஸ்பெயின்-பிரான்ஸ் மோதுகின்றன.
இங்கிலாந்து அபாரம்
நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மோதின. சுவிட்சர்லாந்தின் எம்போலோ (75வது), இங்கிலாந்தின் சக்கா (80 வது) கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் ஆனது. பின் நடந்த கூடுதல் நேரத்தில் (30 நிமிடம்) யாரும் கோல் அடிக்கவில்லை. அடுத்து 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது.
இங்கிலாந்து சார்பில் பால்மெர், பெல்லிங்ஹாம், சக்கா, டோனே, அலெக்சாண்டர் என ஐந்து வீரர்களும் கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து தரப்பில் பேபியன், ஷாக்ரி, ஜெகி மட்டும் கோல் அடித்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.