/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
யூரோ: அரையிறுதியில் ஸ்பெயின் * வெளியேறியது ஜெர்மனி
/
யூரோ: அரையிறுதியில் ஸ்பெயின் * வெளியேறியது ஜெர்மனி
யூரோ: அரையிறுதியில் ஸ்பெயின் * வெளியேறியது ஜெர்மனி
யூரோ: அரையிறுதியில் ஸ்பெயின் * வெளியேறியது ஜெர்மனி
UPDATED : ஜூலை 06, 2024 12:17 AM
ADDED : ஜூலை 05, 2024 10:59 PM

ஸ்டட்கர்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.
ஜெர்மனியில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஸ்டட்கர்ட்டில் நடந்த முதல் காலிறுதியில் ஸ்பெயின் ('நம்பர்-8'), ஜெர்மனி ('நம்பர்-16') அணிகள் மோதின.
ஸ்பெயின் அணிக்கு 51வது நிமிடத்தில் டேனி ஆல்மோ, கோல் அடித்து கைகொடுத்தார். போட்டி முடிய 1 நிமிடம் இருந்த போது, ஜெர்மனியின் புளோரியன் (89வது) ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. போட்டி முடிய ஒரு நிமிடம் (119வது) இருந்த போது, டேனி கொடுத்த பந்தை, தலையால் முட்டி கோல் அடித்தார் மெரினோ. ஸ்பெயின் 2-1 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
சொந்தமண்ணில் ஜெர்மனி, சோகத்துடன் வெளியேறியது.