இந்திய பெண்கள் மூன்றாமிடம் * 'பிபா' சீரிஸ் கால்பந்தில்...
இந்திய பெண்கள் மூன்றாமிடம் * 'பிபா' சீரிஸ் கால்பந்தில்...
ADDED : ஏப் 15, 2026 11:23 PM

நைரோபி: 'பிபா' சீரிஸ் கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி மூன்றாவது இடம் பிடித்தது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், பெண்கள் அணிகளுக்கான 'பிபா' சீரிஸ் தொடர் முதன் முறையாக நடத்தப்படுகிறது. பல்வேறு கண்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. பிரேசில், ஐவரி கோஸ்ட், தாய்லாந்து, கென்யா என நான்கு இடங்களில் தொடர் நடக்கின்றன. ஒவ்வொரு தொடரிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
கென்யாவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலியா (15வது இடம்), இந்தியா (67), கென்யா (133), மலவாய் (153) அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் இந்திய அணி, 0-2 என கென்யாவிடம் தோற்றது. ஆஸ்திரேலியா 5-0 என மலவாயை வீழ்த்தியது.
நேற்று நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அரையிறுதியில் தோற்ற இந்தியா, மலவாய் அணிகள் மோதின. கேப்டனாக ஷில்கி களமிறங்கினார். இந்திய அணிக்கு அஸ்தம் (19 வது நிமிடம்), அவேகா (45+1) கோல் அடித்தனர். மறுபக்கம் குமலோ (43), தேபோரா (60) கோல் அடிக்க, ஸ்கோர் 2-2 என இருந்தது. போட்டியின் 84 வது நிமிடத்தில் பிரியதர்ஷினி (தமிழகம்) ஒரு கோல் அடிக்க, இந்தியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.
