தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி * 2026 உலக கோப்பை கால்பந்தில்...

மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி * 2026 உலக கோப்பை கால்பந்தில்...

மீண்டும் களமிறங்குவாரா மெஸ்ஸி * 2026 உலக கோப்பை கால்பந்தில்...


ADDED : ஏப் 18, 2025 10:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 10:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வரும் 2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறார் மெஸ்ஸி.

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடாவில், வரும் 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. கடைசியாக 2022ல் கத்தாரில் நடந்த தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கோப்பை வென்றது. தற்போது 38 வயதான மெஸ்ஸி, மீண்டும் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்பாரா, இல்லை ஓய்வு பெறுவாரா என விவாதம் எழுந்துள்ளன.

இதுகுறித்து மெஸ்ஸி கூறியது:

என்னைப் பொறுத்தவரையில் கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து விட்டேன். இவற்றில் சில வியக்கத்தக்கவை, மிகவும் மதிப்பு மிக்கவை. கடவுள் தான் இதையெல்லாம் எனக்கு கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

வரும் 2026 உலக கோப்பை தொடர் குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்பது விரைவில் தெரியவரும். இந்த வகையில் தற்போதைய 2025ம் ஆண்டு மிக முக்கியமானது. அதேநேரம், உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை என்றால், அது பொய் சொல்வது போல ஆகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார். இதனால் மெஸ்ஸி, மீண்டும் உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என நம்பப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us