sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

கால்பந்து: பிரேசில் கலக்கல் * கொலம்பியாவை வீழ்த்தியது

/

கால்பந்து: பிரேசில் கலக்கல் * கொலம்பியாவை வீழ்த்தியது

கால்பந்து: பிரேசில் கலக்கல் * கொலம்பியாவை வீழ்த்தியது

கால்பந்து: பிரேசில் கலக்கல் * கொலம்பியாவை வீழ்த்தியது


ADDED : மார் 21, 2025 11:08 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரேசிலியா: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் பிரேசில் அணி 2-1 என கொலம்பியாவை வீழ்த்தியது.

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. இதற்கான தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. பிரேசிலில் நடந்த போட்டியில் பிரேசில், கொலம்பியா மோதின. போட்டியின் 6 வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு 'பெனால்டி' கிடைத்தது. இதில் ராபினா கோல் அடித்தார்.

41வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் லுாயிஸ் பெர்ணான்ஸ் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என ஆனது. இரண்டாவது பாதியில் போட்டியின் கடைசி ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+9வது நிமிடம்), பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்தார். பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் பராகுவே 1-0 என சிலியை வென்றது. பெரு 3-1 என பொலிவியாவை சாய்த்தது.

13 போட்டியில் 6 வெற்றி, 3 'டிரா' (4 தோல்வி) செய்த பிரேசில், 21 புள்ளியுடன் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. அர்ஜென்டினா (12ல் 8 வெற்றி, 1 'டிரா', 3 தோல்வி) 25 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us