sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

உலக கால்பந்து: பங்கேற்குமா ஈரான்

/

உலக கால்பந்து: பங்கேற்குமா ஈரான்

உலக கால்பந்து: பங்கேற்குமா ஈரான்

உலக கால்பந்து: பங்கேற்குமா ஈரான்


ADDED : மார் 03, 2026 11:07 PM

Google News

ADDED : மார் 03, 2026 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெனிவா: உலக கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசியாவின் பலம் வாய்ந்த ஈரான் ('நம்பர்-20') 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கடந்த 8 தொடரில் 6வது முறையாக பங்கேற்கும் ஈரான் அணி, நியூசிலாந்து (ஜூன் 15), பெல்ஜியம் (21), எகிப்துடன் (26) மோத உள்ளது. இப்போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளன.

தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இதனால், தனது மண்ணில் உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஈரானுக்கு, அமெரிக்கா அனுமதி தருமா அல்லது அமெரிக்காவுக்கு தனது அணியை ஈரான் அனுப்புமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தொடர் துவங்கும் 30 நாளுக்கு முன், ஈரான் மறுத்தால் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை 'பிபா' அபராதம் விதிக்கும். தவிர 2030 உலக கோப்பை தகுதிச்சுற்றில் இருந்து வெளியேற்றப்படும்.

யாருக்கு வாய்ப்பு

ஈரான் விலகும் பட்சத்தில் ஆசிய தரவரிசையில் 9வது இடத்திலுள்ள ஈராக் அல்லது 10வது இடத்திலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us