தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அர்ஜென்டினா வீரருக்கு 10 போட்டி தடை * ரூ. 3.64 கோடி அபராதம்

அர்ஜென்டினா வீரருக்கு 10 போட்டி தடை * ரூ. 3.64 கோடி அபராதம்

அர்ஜென்டினா வீரருக்கு 10 போட்டி தடை * ரூ. 3.64 கோடி அபராதம்


ADDED : ஆக 22, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலக கோப்பை தொடரில் சர்ச்சை கிளப்பிய அர்ஜென்டினா அணி, வீரர்கள் மீது, தடை, அபராதம் உட்பட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, இங்கிலாந்தை வென்றது. அப்போது, அர்ஜென்டினா அணி வீரர் செல்சோ, அரசியல் சார்ந்த 'பால்க்லாந்து தீவு அர்ஜென்டினாவுக்கு சொந்தமானது,' என்ற வாசகம் கொண்ட போஸ்டரை காண்பித்து, சக வீரர்களுடன் இணைந்து கொண்டாடினர். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

பைனலில் மோதல்

அடுத்து நடந்த பைனலில் ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து சாம்பியன் ஆனது. இந்த உற்சாகத்தில் ஸ்பெயின் அணி வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோல்வி விரக்தியில் நின்றிருந்த அர்ஜென்டினா வீரர்களுடன் மோதல் ஏற்பட்டது.

அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரதேஸ், எரிக் கார்சியா கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். இதைப் பார்த்த ஸ்பெயின் வீரர் காவி, ஓடி வந்து பரதேஸ் முதுகில் இடித்து தள்ளினார். இதனால் கோபமடைந்த பரதேஸ், சக அர்ஜென்டினா வீரர்கள் காவியை பிடித்து தள்ளி, ஜெர்சியை கிழித்தனர்.

இதுகுறித்து விசாரித்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 'பிபா', வீரர்களுக்கு தடை, அபராதம் என பல ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் விபரம்:

* பரதேஸி 10 போட்டியில் பங்கேற்க தடை, ரூ. 86 லட்சம் அபராதம்.

* மோலினாவுக்கு 7 போட்டி தடை, ரூ. 86 லட்சம்.

* அல்மடா, காவி (ஸ்பெயின்), அயாலாவுக்கு (அர்ஜென்டினா அணி அதிகாரி), தலா ஒரு போட்டி தடை, ரூ. 29 லட்சம் அபராதம்.

* 'போஸ்டர்' விவகாரத்தில் அர்ஜென்டினா அணிக்கு ரூ. 3.64 கோடி அபராதம்.

* தவிர, அர்ஜென்டினா அணி சொந்தமண்ணில் விளையாடும் தனது அடுத்த போட்டிக்கு, மைதான இருக்கைகளில் 50 சதவீத ரசிகர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

* இனவெறிக்கு எதிரான திட்டங்களுக்கு ரூ. 96 லட்சம் அர்ஜென்டினா செலவிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us