தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/பைனலுக்கு போக மாட்டேன் * அர்ஜென்டினா அதிபர் முடிவு

பைனலுக்கு போக மாட்டேன் * அர்ஜென்டினா அதிபர் முடிவு

பைனலுக்கு போக மாட்டேன் * அர்ஜென்டினா அதிபர் முடிவு


ADDED : ஜூலை 17, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பியுனஸ் ஏர்ஸ்: ''உலக கோப்பை கால்பந்து பைனலை நேரில் காணப் போவதில்லை. மாறாக வீட்டில் இருந்து பார்க்கப் போகிறேன்,'' என அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா மக்கள் மூட நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதனை அர்ஜென்டினாவில் 'காபாலா' என்கின்றனர். தங்கள் அணியின் வெற்றிக்காக, 'மைதானத்தில் ஒரே இருக்கையில் அமர்வது, தொடர் முழுவதும் ஒரே மாதிரியில் ஆடை அணிவது,' என பல்வேறு விஷயங்கள் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இரு உலக கோப்பை போட்டியில் களமிறங்கியது போல, நடப்பு தொடரின் அரையிறுதியிலும், அர்ஜென்டினா அணியினர் கருநீல நிற ஜெர்சி அணிந்து விளையாடி, வெற்றியும் பெற்றனர்.

இந்த நம்பிக்கை அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலெய்க்கும் உண்டு போல. தங்கள் அணி பைனலில் விளையாட உள்ளதால், நியூ ஜெர்சி செல்வீர்களா?, என கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், ''அர்ஜென்டினா விளையாடிய அனைத்து போட்டிகளையும் வீட்டில் இருந்து தான் பார்த்தேன். பைனலுக்காக அமெரிக்கா செல்ல மாட்டேன். தொடர்ந்து வீட்டில் இருந்து ரசிப்பேன்.

ஏனெனில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது, வெப்பம் அதிகமாக இருந்ததால், எனது மேல் சட்டையை கழற்றினேன். உடனே சுவிட்சர்லாந்து அணியினர் கோல் அடித்து விட்டனர். மீண்டும் சட்டை அணிந்த பின் முடிவு மாறியது. தற்போது அதை கழற்றுவதே இல்லை,'' என்றார்.

இது வரலாறு

கடந்த 1990 உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி, கேமரூனிடம் தோற்றது. இப்போட்டிக்கு சற்று முன், அப்போதைய அதிபர் கார்லஸ் மெனெம், அர்ஜென்டினா வீரர்களை சந்தித்து இருந்தார்.

இதனால் தான் அர்ஜென்டினா போட்டியில் தோற்றது, 'கார்லஸ் துரதிருஷ்டசாலி, என அவர் மீது முத்திரை குத்தினர்.

அன்று முதல் பதவியில் இருக்கும் எந்த ஒரு அதிபரும், அர்ஜென்டினா பங்கேற்கும் போட்டியை பார்க்க, நேரில் செல்வது இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us