ஸ்பெயின் அணியில் யமால் * உலக கோப்பை கால்பந்து தொடரில்
ஸ்பெயின் அணியில் யமால் * உலக கோப்பை கால்பந்து தொடரில்
ADDED : மே 25, 2026 11:27 PM

மாட்ரிட்: ஸ்பெயின் அணியில் லமைன் யமால், நிகோ வில்லியம்ஸ் இடம் பெற்றனர்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரின், 23வது சீசன் (ஜூன் 11 - ஜூலை 19) நடக்கவுள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
உலகத் தரவரிசையில் 'நம்பர்-2' ஆக உள்ள, கடந்த 2010ல் சாம்பியன் ஆன ஸ்பெயின் அணி, 'எச்' பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் கேப் வெர்டே அணியை (ஜூன் 15) சந்திக்க உள்ளது. அடுத்து சவுதி அரேபியா (ஜூன் 21), உருகுவே (ஜூன் 26) அணிகளை எதிர்கொள்ளும்.
இத்தொடருக்கான 26 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. முதன் முறையாக ரியல் மாட்ரிட் கிளப்பை சேர்ந்த எவ்வித வீரரும் இதில் இடம் பெறவில்லை. சமீபத்தில் காயமடைந்த மத்திய கள வீரர் பெர்மின் லோபெஸ், சேர்க்கப்படவில்லை.
இளம் வீரர் லமைன் யமால், நிகோ வில்லியம்ஸ் என இருவரும் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட போதும், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக கோப்பை தொடர் துவங்கும் முன் இவர்கள் மீண்டு வருவர் என நம்பப்படுகிறது.
முன்கள வீரர்களாக டோரஸ், எரெமி பினோ, விக்டர் முனோஸ், மத்திய களத்தில் ரோட்ரி, பெத்ரி, பேபியன் ருயிஸ், கேவி, தற்காப்பு வீரர்களாக கிரிமால்டோ, மார்கஸ், கார்சியா இடம் பெற்றுள்ளனர்.
கோல் கீப்பர்களாக சிமோன். டேவிட் ராயா, ஜோயன் கார்சியா உள்ளனர்.
