தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/'ஸ்பெஷல்' உலக கோப்பை * ரொனால்டோ உற்சாகம்

'ஸ்பெஷல்' உலக கோப்பை * ரொனால்டோ உற்சாகம்

'ஸ்பெஷல்' உலக கோப்பை * ரொனால்டோ உற்சாகம்


ADDED : டிச 12, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்ரிட்: ''2030ல் போர்ச்சுகலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது மிகவும் ஸ்பெஷலானது,'' என கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. கடைசியாக 2022ல் கத்தாரில் நடந்த தொடரில் மெஸ்சியின் அர்ஜென்டினா கோப்பை வென்றது. 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கும். 2030 ல் ஸ்பெயின், மொரோக்கோ, போர்ச்சுகல், 2034ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளன.

நுாறு ஆண்டு

முதல் உலக கோப்பை தொடர் 1930ல் உருகுவேயில் நடந்தது. இதைக் கொண்டாடும் வகையில் நுாற்றாண்டு தொடரின் (2030) ஒரு போட்டி உருகுவேயில் நடக்கும். தவிர, அர்ஜென்டினா, பாராகுவே என இத்தொடர் முதன் முறையாக 6 நாடுகளில் நடக்கும்.

இதுகுறித்து 5 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் ரொனால்டோ 39, கூறுகையில்,'' போர்ச்சுகலில் உலக கோப்பை தொடர் நடத்த வேண்டும் என்ற கனவு நனவாகி உள்ளது. எங்களை போர்ச்சுகல் பெருமைப்படச் செய்துள்ளது. இதனால் 2030 தொடர் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் ஸ்பெஷலானது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us