/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
உலக கோப்பை கால்பந்து * 2034 ல் சவுதி அரேபியாவில்...
/
உலக கோப்பை கால்பந்து * 2034 ல் சவுதி அரேபியாவில்...
உலக கோப்பை கால்பந்து * 2034 ல் சவுதி அரேபியாவில்...
உலக கோப்பை கால்பந்து * 2034 ல் சவுதி அரேபியாவில்...
ADDED : டிச 11, 2024 10:47 PM

ஜெனிவா: வரும் 2034ல், 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. கடைசியாக 2022ல் கத்தாரில் நடந்த தொடரில் மெஸ்சியின் அர்ஜென்டினா வென்றது. அடுத்து 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கும்.
2030 ல் ஸ்பெயின், மொரோக்கோ, போர்ச்சுகலில் நடக்க உள்ளன. அர்ஜென்டினா, பாராகுவே, உருகுவேயில் தலா ஒரு போட்டி நடக்கும்.
2034ல் சவுதி அரேபியாவில் உலக கோப்பை தொடர் நடத்துவது குறித்து முடிவு செய்ய, நேற்று ஜெனிவாவில், 'பிபா' கூட்டம் நடந்தது. 211 கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆன்லைன் வழியாக பங்கேற்றனர்.
இதில், உறுப்பினர், ஆதரவாக அல்லது எதிராக மட்டும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். வேறு நாடுகள் எதுவும் உலக கோப்பை தொடரை நடத்த முன்வராத நிலையில், சவுதி அரேபியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.

