/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் சாம்பியன்
/
கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் சாம்பியன்
ADDED : ஜன 29, 2024 10:58 PM

புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் ஆனது.
இந்தியாவில் சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. ஐ.எஸ்.எல்., தொடரின் 12 அணிகள், 'ஐ-லீக்' தொடரின் 'டாப்-4' அணிகள் என மொத்தம் 16 அணிகள் மோதின. புவனேஸ்வரில் நடந்த பைனலில் ஈஸ்ட் பெங்கால், ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
39 வது நிமிடம் மவுரிசியோ ஒடிசா அணிக்கு முதல் கோல் அடித்தார். 51 வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்காலின் சேகர் ஒரு கோல் அடிக்க, 62வது நிமிடம் இந்த அணிக்கு 'பெனால்டி' கிடைத்தது. இதை கிரெஸ்போ கோலாக மாற்றினார்.
போட்டியின் கடைசி ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஒடிசா அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு வந்தது. இதில் ஜஹோ கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. இம்முறை ஈஸ்ட் பெங்கால் அணியின் சில்வா, 111 வது நிமிடம் கோல் அடித்து உதவினார். முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.