/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா' * ஆசிய கால்பந்து தகுதி போட்டியில்...
/
கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா' * ஆசிய கால்பந்து தகுதி போட்டியில்...
கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா' * ஆசிய கால்பந்து தகுதி போட்டியில்...
கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா' * ஆசிய கால்பந்து தகுதி போட்டியில்...
ADDED : அக் 09, 2025 10:55 PM

கல்லாங்: சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஆசிய கால்பந்து தகுதி போட்டியை, கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா' செய்தது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
நேற்று தனது மூன்றாவது போட்டியில், தரவரிசையில் 158 வது இடத்திலுள்ள சிங்கப்பூர் அணியை அதன் சொந்தமண்ணில் (கல்லாங்) எதிர்கொண்டது. கோல் கீப்பர் குர்பிரீத்சிங் கேப்டனாக களமிறங்கினார். முதல் பாதி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் சிங்கப்பூர் வீரர் இக் ஷான் பன்டி, ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 0-1 என பின் தங்கியது.
இரண்டாவது பாதி துவங்கியதும், இரண்டாவது முறையாக 'எல்லோ கார்டு' பெற்றார் சந்தேஷ் ஜின்கன். இதையடுத்து 'ரெட் கார்டு' பெற்று வெளியேற, இந்திய 10 வீரர்களுடன் போராடியது.
போட்டியின் கடைசி நிமிடத்தில் (90 வது) ரஹிம் அலி, கோல் அடித்து கைகொடுக்க, தோல்வியில் இருந்து தப்பியது இந்திய அணி. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மீண்டும் அக். 14ல் கோவாவில் நடக்கும் போட்டியில் மோத உள்ளன.
இதுவரை 3 போட்டியில் 2 டிரா, 1 தோல்வியுடன் இந்திய அணி, 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல் இரு இடத்தில் சிங்கப்பூர் (5), ஹாங்காங் (4) உள்ளன.