/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்து பயிற்சியாளர் யார்
/
இந்திய கால்பந்து பயிற்சியாளர் யார்
ADDED : ஜூலை 28, 2025 11:18 PM

புதுடில்லி: இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக ஸ்பெயினின் மனோலோ மார்கஸ் 56, இருந்தார். இந்திய அணியின் தொடர்ச்சியான தோல்வி காரணமாக, தாமாக முன்வந்து பதவி விலகினார் மார்கஸ்.
புதிய பயிற்சியாளர் பதவிக்கு 170 பேர் விண்ணப்பித்தனர். இந்தியாவின் காலித் ஜமில், முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) உட்பட மூன்று பேர் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,), நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''ஏ.ஐ.எப்.எப்., தலைமை நிர்வாகக் குழு கூட்டம் ஆகஸ்ட் 1ல் கூடுகிறது. இதில் இந்திய அணி பயிற்சியாளர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
இருப்பினும், ஐ.எஸ்.எல்., தொடரில் ஜாம்ஷெட்பூர் அணி பயிற்சியாளராக உள்ள இந்தியாவின் காலித் ஜமைல், தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

