/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பைனலில் வடகிழக்கு யுனைடெட் * துாரந்த் கால்பந்து தொடரில்...
/
பைனலில் வடகிழக்கு யுனைடெட் * துாரந்த் கால்பந்து தொடரில்...
பைனலில் வடகிழக்கு யுனைடெட் * துாரந்த் கால்பந்து தொடரில்...
பைனலில் வடகிழக்கு யுனைடெட் * துாரந்த் கால்பந்து தொடரில்...
ADDED : ஆக 26, 2024 10:43 PM

ஷில்லாங்: துாரந்த் கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது வடகிழக்கு யுனைடெட் அணி.
இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. இதன் 133 வது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இதில் வென்ற ஷில்லாங், வடகிழக்கு யுனைடெட், மோகன் பகான், பெங்களூரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில் வடகிழக்கு யுனைடெட், ஷில்லாங் லஜாங் அணிகள் மோதின. போட்டியின் 13வது நிமிடம் வடகிழக்கு யுனைடெட் அணிக்கு தோய் சிங் முதல் கோல் அடித்தார்.
32வது அஜாரெய்யே ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் வடகிழக்கு யுனைடெட் 2-0 என முந்தியது. இரண்டாவது பாதியின் கடைசி ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+3வது நிமிடம்) பார்த்திப் ஒரு கோல் அடித்து உதவினார். முடிவில் வடகிழக்கு யுனைடெட் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. துாரந்த் கோப்பை தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது.