/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இன்டர் காசி 'சாம்பியன்' * சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
/
கால்பந்து: இன்டர் காசி 'சாம்பியன்' * சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
கால்பந்து: இன்டர் காசி 'சாம்பியன்' * சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
கால்பந்து: இன்டர் காசி 'சாம்பியன்' * சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : ஜூலை 18, 2025 10:59 PM

புதுடில்லி: இந்தியாவில் 'ஐ-லீக்' கால்பந்து தொடரின் 18 வது சீசன் கடந்த 2024, நவ. 22 முதல் 2025, ஏப்ரல் 6 வரை நடந்தது. இதில் மொத்தம் 12 அணிகள் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின.
இதில் நம்தாரி அணி தகுதியற்ற வீரரை களமிறக்கியதால், இன்டர் காசி அணிக்கு 3 புள்ளி வழங்கப்பட்டது. பின், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) ரத்து செய்தது.
தவிர, சர்ச்சில் பிரதர்ஸ், ரியல் காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் தகுதியற்ற வீரரை களமிறக்கியதாக, இன்டர் காசி அணியின் 4 புள்ளி ரத்து செய்யப்பட்டது. இதனால் சர்ச்சில் பிரதர்ஸ் அணி 42 புள்ளியுடன் முதலிடம் பெற்று, சாம்பியன் ஆனதாக ஏ.ஐ.எப்.எப்., அறிவித்தது. இன்டர் காசி அணி 35 புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தீர்ப்பு சாதகம்
இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் இன்டர் காசி அணி முறையிட்டது. முடிவில் இன்டர் காசி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதன் படி கூடுதலாக 7 புள்ளி (3+4) கிடைத்தது. மொத்தம் 42 புள்ளியுடன் இன்டர் காசி அணி முதலிடம் பிடித்து, 'ஐ-லீக்' தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனது. தவிர, 2025-26 ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றது. 2 புள்ளி குறைக்கப்பட்டதால், சர்ச்சில் பிரதர்ஸ் (40) அணி இரண்டாவது இடம் பிடித்தது.

