/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியா-மலேசியா மோதல் * நட்பு கால்பந்தில்...
/
இந்தியா-மலேசியா மோதல் * நட்பு கால்பந்தில்...
ADDED : செப் 25, 2024 10:38 PM

புதுடில்லி: இந்தியா, மலேசிய அணிகள் நட்பு கால்பந்தில் மோத உள்ளன.
இந்திய கால்பந்து அணி, கடைசியாக 3 நாடுகள் விளையாடிய இன்டர்கான்டினென்டல் தொடரில் பங்கேற்றது. சுனில் செத்ரி ஓய்வுக்குப் பின், புதிய பயிற்சியாளர் மனோலோ மார்கஸ் தலைமையில் இத்தொடரில் களமிறங்கியது. இரண்டு போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காமல், 3வது இடம் பிடித்தது.
தற்போது உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்தியா, 132 வது இடத்திலுள்ள மலேசிய அணிக்கு எதிராக நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்தியாவில் வரும் நவம்பர் 19ல் நடக்கவுள்ள இப்போட்டி, நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தவிர கடந்த அக்., 2023க்குப் பின் இரு அணிகள் மீண்டும் மோத உள்ளன.
முன்னதாக மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் சுனில் செத்ரி, மகேஷ் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.