/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
எப்போது வருவார் மெஸ்ஸி * கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு
/
எப்போது வருவார் மெஸ்ஸி * கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு
எப்போது வருவார் மெஸ்ஸி * கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு
எப்போது வருவார் மெஸ்ஸி * கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 19, 2025 10:52 PM

திருவனந்தபுரம்: ''மெஸ்சி, அர்ஜென்டினா அணி வீரர்கள் கேரளா வருவதற்கு அனுமதி கிடைத்துள்ளது,'' என கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது அர்ஜென்டினா (1978, 1986, 2022). இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது.
2025ம் ஆண்டின் பின் பகுதியில், கேரளா அரசின் மேற்பார்வையில் இப்போட்டி நடக்க உள்ளது. மாநிலத்தின் வர்த்தகர்கள் இணைந்து, இப்போட்டிக்காக நிதி உதவி செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கேரளா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் நேற்று சட்டசபையில் கூறுகையில்,'' மெஸ்ஸி, அர்ஜென்டினா அணியினர் கேரளா வருகை சம்பந்தமாக மத்திய அரசு இரண்டு அனுமதி கொடுத்துள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகம், ரிசர்வ் வங்கி தரப்பில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மற்ற பணிகள் முடிந்த பின், இதுகுறித்த மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்,'' என்றார்.