/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: சுனில் செத்ரிக்கு இடமில்லை * இந்திய உத்தேச அணி அறிவிப்பு
/
கால்பந்து: சுனில் செத்ரிக்கு இடமில்லை * இந்திய உத்தேச அணி அறிவிப்பு
கால்பந்து: சுனில் செத்ரிக்கு இடமில்லை * இந்திய உத்தேச அணி அறிவிப்பு
கால்பந்து: சுனில் செத்ரிக்கு இடமில்லை * இந்திய உத்தேச அணி அறிவிப்பு
ADDED : ஆக 16, 2025 11:02 PM

புதுடில்லி: நேஷன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய கால்பந்து, உத்தேச அணியில் 'சீனியர்' சுனில் செத்ரி சேர்க்கப்படவில்லை.
மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர், வரும் ஆகஸ்ட் 28-செப்டம்பர் 8ல் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்க உள்ளது.
மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். இரு பிரிவிலும் இரண்டாவது இடம் பெறும் அணிகள், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும். இத்தொடரில் 'பி' பிரிவில் இடம் பெற்ற மலேசிய அணி விலகியது.
சிறப்பு அழைப்பின் பேரில் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி இதில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டியில் ஆக. 29ல் தஜிகிஸ்தான், அடுத்து செப். 1ல் வலிமையான ஈரான் (20 வது இடம்), செப். 4ல் ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.
செத்ரிக்கு 'நோ'
புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் 35 பேர் இடம் பெற்ற இந்திய உத்தேச அணி பட்டியல் வெளியானது. 'சீனியர்' சுனில் செத்ரி பெயர் இதில் சேர்க்கப்படவில்லை. கடந்த 2024, ஜூன் மாதம் ஓய்வு பெற்றார் செத்ரி. பின் அப்போதைய பயிற்சியாளர் மார்கஸ் அழைப்பின் பேரில், மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினார்.
4 போட்டியில் பங்கேற்ற செத்ரி 41, 1 கோல் மட்டும் அடித்தார். தற்போது அணியில் சேர்க்கப்படாததன் காரணம் தெரியவில்லை. இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று பெங்களூருவில் துவங்கியது. 22 பேர் பங்கேற்றனர். மீதமுள்ள வீரர்கள் துாரந்த் கோப்பை முடிந்த பின் கலந்து கொள்வர்.