/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
விரைவில் சூப்பர் கோப்பை கால்பந்து * ஐ.எஸ்.எல்., தொடருக்குப் பதில்...
/
விரைவில் சூப்பர் கோப்பை கால்பந்து * ஐ.எஸ்.எல்., தொடருக்குப் பதில்...
விரைவில் சூப்பர் கோப்பை கால்பந்து * ஐ.எஸ்.எல்., தொடருக்குப் பதில்...
விரைவில் சூப்பர் கோப்பை கால்பந்து * ஐ.எஸ்.எல்., தொடருக்குப் பதில்...
ADDED : ஆக 07, 2025 10:43 PM

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., தொடருக்கு முன், சூப்பர் கோப்பை கால்பந்து தொடரை நடத்த ஏ.ஐ.எப்.எப்., முடிவு செய்துள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2013ல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் துவங்கப்பட்டது. இத்தொடரை நடத்த கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் (எப்.எஸ்.டி.எல்.,), 15 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது வரும் டிச. 2025ல் முடிகிறது.
புதிய ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. இதனால் 12வது சீசன் (2025-26) நிறுத்தி வைக்கப்படுவதாக, எப்.எஸ்.டி.எல்., அறிவித்தது. இது எப்போது துவங்கும் என உறுதியாக எதுவும் தெரியவில்லை. பெங்களூரு அணி நிர்வாகம், வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான சம்பளத்தை நிறுத்தியது. சென்னை அணி நிர்வாகம், பயிற்சி சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து விவாதிக்க ஏ.ஐ.எப்.எப்., மற்றும் ஐ.எஸ்.எல்., பிரதிநிதிகள் கூட்டம் டில்லியில் நடந்தது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம், 13 ஐ.எஸ்.எல்., அணிகள் பங்கேற்கும் சூப்பர் கோப்பை தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின் 2026, மே 31 வரை ஐ.எஸ்.எல்., தொடர் நடக்கலாம். இதனால் ஐ.எஸ்.எல்., அணிகள் மீண்டும் தங்களது வழக்கமான பயிற்சியை துவக்கலாம்.