/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் வெற்றி
/
கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் வெற்றி
ADDED : ஜன 10, 2025 07:16 PM

கோல்கட்டா: ஐ.டபிள்யு.எல்., கால்பந்து தொடர் முதல் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் பெண்கள் அணி 2-0 என கர்நாடகாவை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் 8 வது சீசன் நேற்று துவங்கியது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்து சேது, நடப்பு சாம்பியன் ஒடிசா, கோல்கட்டாவின் ஈஸ்ட் பெங்கால் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி சாம்பியன் கோப்பை தட்டிச் செல்லும்.
நேற்று கோல்கட்டாவில் நடந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கிக் ஸ்டார்ட் கர்நாடகா அணிகள் மோதின. போட்டியின் 22வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீராங்கனை சந்தியா (தமிழகம்), ஒரு கோல் அடித்தார். 49 வது நிமிடம் ரேஸ்டி தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்த, ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஒடிசா, கோகுலம் கேரளா அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.

