/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியாவின் இலக்கு உலக கோப்பை * கால்பந்து வீராங்கனை ஸ்வீட்டி தேவி நம்பிக்கை

ADDED : ஜூலை 09, 2025 11:03 PM

புதுடில்லி: பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், 2026, மார்ச் 1-26ல் ஆஸ்திரேலியாவில் (12 அணிகள்) நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடந்தது.
'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, 12 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, முதன் முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
இத்தொடரில் 12 அணிகள் தலா 4 கொண்ட 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' அணிகளுடன், இரண்டாவது இடம் பெற்ற சிறந்த 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதன்படி, காலிறுதிக்கு செல்லும் 8 அணிகள், 2027ல் பிரேசிலில் நடக்க உள்ள 'பிபா' பெண்கள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இதுகுறித்து இந்திய அணி வீராங்கனை ஸ்வீட்டி தேவி கூறியது:
ஆசிய கோப்பை தொடருக்கு 23 ஆண்டுக்குப் பின் தகுதி பெற்றதை, இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை. இதில் பல்வேறு உணர்வுகள் கலந்துள்ளன. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெண்கள் கால்பந்துக்கு ஆதரவு தரும் யாரும், எங்களது மகிழ்ச்சியை புரிந்து கொள்வர்.
அடுத்து உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது தான் எங்களது அடுத்த இலக்கு. இதற்கான கனவு இன்னும் அப்படியே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.