/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
'நாக் அவுட்' சுற்றில் பாரிஸ் அணி * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
/
'நாக் அவுட்' சுற்றில் பாரிஸ் அணி * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
'நாக் அவுட்' சுற்றில் பாரிஸ் அணி * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
'நாக் அவுட்' சுற்றில் பாரிஸ் அணி * கிளப் உலக கோப்பை கால்பந்தில்...
ADDED : ஜூன் 24, 2025 10:39 PM

சியாட்டில்: 'கிளப்' உலக கோப்பை கால்பந்து தொடரின் 'நாக் அவுட்' ('ரவுண்ட்') சுற்றுக்கு பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன், பொடாபோகோ அணிகள் முன்னேறின.
அமெரிக்காவில், கிளப் அணிகள் (32) பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. சியாட்டில் நகரில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணி 2-0 என சியாட்டில் அணியை வீழ்த்தியது. பாரிஸ் அணிக்கு கிவிசா (35), ஹகிமி (66) தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு போட்டியில் அத்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என பொடாபோகோ அணியை வென்றது. 'சி' பிரிவில் பாரிஸ், பொடாபோகோ, மாட்ரிட் என 3 அணிகளும் தலா 6 புள்ளியுடன் 'டாப்-3' இடம் பிடித்தன. இருப்பினும் கோல் அடிப்படையில் முந்திய பாரிஸ், பொடாபோகோ அணிகள் 'ரவுண்ட் 16' சுற்றுக்கு முன்னேறின.
மயாமி 'டிரா'
'ஏ' பிரிவில் மெஸ்சி இடம் பெற்ற இன்டர் மயாமி, பால்மெய்ரஸ் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இன்டர் மயாமி சார்பில் ஆலன்டே (16), சுவாரஸ் (65) தலா ஒரு கோல் அடித்தனர். பால்மெய்ரஸ் அணிக்காக பவுலினோ (80), மவுரிசியோ (87) கோல் அடித்தனர்.
போர்ட்டோ, அல் அஹ்லி அணிகள் மோதிய மற்றொரு போட்டியும் 4-4 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. 'ஏ' பிரிவில் பால்மெய்ரஸ் (5), இன்டர் மயாமி (5) அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. போர்டோ (2) அணி வெளியேறியது.