/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கோவா அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
/
கோவா அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
ADDED : ஜன 04, 2025 10:05 PM

புவனேஸ்வர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோவா அணி 4-2 என ஒடிசா அணியை வீழ்த்தியது.
ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா, கோவா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் கோவா அணியின் பிரிசன் பெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 29வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் அகமது ஜாஹூ ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2வது நிமிடம்) உதாண்டா சிங் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் கோவா அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய பிரிசன், 53வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ஒடிசா அணியின் அமே ரணவாடே 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். பின் 88வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் கோவா அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.கோவா அணி 13 போட்டியில், 7 வெற்றி, 4 'டிரா', 2 தோல்வி என 25 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. ஒடிசா அணி (20 புள்ளி) 6வது இடத்தில் உள்ளது.
ஜாம்ஷெட்பூரில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், பெங்களூரு அணிகள் மோதின. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.