ADDED : மே 22, 2026 10:07 PM

மான்செஸ்டர்: உலக கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஹாரி கேன் இடம் பெற்றுள்ளார்.
கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் (ஜூன் 11 - ஜூலை 19) நடக்கவுள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து அணி, 'எல்' பிரிவில் குரோஷியா (ஜூன் 17), கானா (ஜூன் 23), பனாமா (ஜூன் 27) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
இத்தொடருக்கான 26 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில், உள்ளூர் கிளப் அணிகளுக்கான போட்டியில் பெரிய அளவில் சோபிக்காத பில் போடன் (மான்செஸ்டர் சிட்டி), கோல் பால்மர் (செல்சி) நீக்கப்பட்டனர். முன்னணி வீரர்களான ஹாரி கேன், பெல்லிங்ஹாம், புகாயோ சாகா, டெக்லன் ரைஸ், தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இங்கிலாந்துக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய இவான் டோனி சேர்க்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர்களாக டீன் ஹென்டர்சன், ஜோர்டான் பிக்போர்டு, ஜேம்ஸ் டிராப்போர்டு இடம் பெற்றுள்ளனர்.
