/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
'ஐ-லீக்' கால்பந்து: டில்லி அணி வெற்றி
/
'ஐ-லீக்' கால்பந்து: டில்லி அணி வெற்றி
ADDED : மார் 02, 2025 08:28 PM

மஹில்பூர்: 'ஐ-லீக்' கால்பந்து போட்டியில் டில்லி அணி 2-1 என, டெம்போ அணியை வீழ்த்தியது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் 'ஐ-லீக்' தொடர் நடத்தப்படுகிறது. நேற்று, பஞ்சாப் மாநிலம் மஹில்பூரில் நடந்த லீக் போட்டியில் டில்லி, டெம்போ அணிகள் மோதின. அபாரமாக ஆடிய டில்லி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு ஸ்டீபன் சமிர் டியுபெனி பினாங் (8வது நிமிடம்), விக்டர் ஹம்ஹுகா (20வது) கைகொடுத்தனர். டெம்போ அணி சார்பில் மார்கஸ் ஜோசப் (36வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
ஐதராபாத்தில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் டெக்கான், நாம்தாரி அணிகள் மோதின. கிளட்சன் கார்வால்ஹோ டா சில்வா (12வது நிமிடம்) கைகொடுக்க நாம்தாரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 17 போட்டியில், 7 வெற்றி, 5 'டிரா', 5 தோல்வி என 26 புள்ளிகளுடன் நாம்தாரி அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. டெக்கான் அணி 22 புள்ளிகளுடன் (6 வெற்றி, 4 'டிரா', 7 தோல்வி) 8வது இடத்தில் உள்ளது. டில்லி அணி 13 புள்ளிகளுடன் (3 வெற்றி, 4 'டிரா', 10 தோல்வி) 11வது இடத்துக்கு முன்னேறியது. டெம்போ அணி 19 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 'டிரா', 8 தோல்வி) 9வது இடத்தில் உள்ளது.