/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு
/
கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு
ADDED : மே 24, 2024 10:29 PM

புவனேஸ்வர்: உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
இதுவரை நடந்த 4 போட்டியில் தலா 1 வெற்றி, 'டிரா'வுடன் (2 தோல்வி) 4 புள்ளி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்து ஜூன் 6ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி, குவைத்தை சந்திக்கவுள்ளது.
இதில் சிறப்பாக செயல்பட்டு 'டாப்-2' இடத்தை தக்கவைத்தால், உலக கோப்பை மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு முன்னேறலாம். தவிர 2027ல் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கும் தகுதி பெறலாம்.
இதற்கான 27 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டன் சுனில் செத்ரி 39, இப்போட்டியுடன் விடைபெற காத்திருக்கிறார்.
கோல்கீப்பராக அனுபவ குர்பீரித் சிங் சாந்து, அன்வர் அலி, ராகுல் பெகே, சுபாஷிஸ் போஸ், அனிருத் தபா, சாங்டே, மன்விர் சிங், ரஹிம் அலி, விக்ரம் பிரதாப் சிங், ஜீக்சன் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.