ADDED : ஜூன் 01, 2024 11:15 PM

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான நட்பு போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய பெண்கள் கால்பந்து அணி, இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்கிறது. தாஷ்கென்ட்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 49வது நிமிடம் இந்திய வீராங்கனைகள் செய்த தவறு காரணமாக, உஸ்பெகிஸ்தான் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை கபியுல்லயவா கோலாக மாற்றினார். 77 வது நிமிடம் கபியுல்லயவா, மற்றொரு கோல் அடித்தார்.
89 வது நிமிடத்தில் மீண்டும் அசத்திய கபியுல்லயவா, 'ஹாட்ரிக்' கோல் அடித்து மிரட்டினார். முடிவில் இந்திய பெண்கள் அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி ஜூன் 4ல் நடக்கவுள்ளது.