/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்து அணி அறிவிப்பு * உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான...
/
இந்திய கால்பந்து அணி அறிவிப்பு * உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான...
இந்திய கால்பந்து அணி அறிவிப்பு * உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான...
இந்திய கால்பந்து அணி அறிவிப்பு * உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான...
ADDED : மே 07, 2024 10:56 PM

புதுடில்லி: உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டது.
உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
இதுவரை நடந்த நான்கு போட்டியில் தலா 1 வெற்றி, 'டிரா'வுடன் (2 தோல்வி) 4 புள்ளி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்து ஜூன் 6ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி, குவைத்தை சந்திக்கவுள்ளது. கடைசியாக ஜூன் 11ல் அல் ரய்யானில் நடக்கும் போட்டியில் இந்தியா, கத்தார் அணிகள் மோத காத்திருக்கின்றன.
சிறப்பாக செயல்பட்டு 'டாப்-2' இடத்தை தக்கவைத்தால், உலக கோப்பை மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு முன்னேறலாம். தவிர 2027ல் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கும் தகுதி பெறலாம்.
இதற்கான முதற்கட்ட இந்திய அணியில் 26 பேர் இடம் பெற்றனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் மே 10ல் ஒடிசாவில் துவங்குகிறது.
தற்போது இரண்டாவது கட்ட 15 பேர் கொண்ட உத்தேச அணி பட்டியலில் வெளியானது. இந்த வீரர்கள் மே 15 முதல் பயிற்சி முகாமில் பங்கேற்பர்.
சிரியா அணிக்கு எதிராக காயமடைந்த தற்காப்பு வீரர் சந்தேஷ் ஜின்கன் இதில் தேர்வு செய்யப்படவில்லை. மற்றபடி சுனில் செத்ரி, அனிருத் தபா, ராகுல் பெக்கே, சுபாஷிஸ் போஸ், சாங்டே, அப்துல் சமத், மன்விர் சிங், விக்ரம் பிரதாப் சிங், ஜீக்சன் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.