sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

இன்டர் மயாமி வெற்றி: 2 கோல் அடித்தார் மெஸ்சி

/

இன்டர் மயாமி வெற்றி: 2 கோல் அடித்தார் மெஸ்சி

இன்டர் மயாமி வெற்றி: 2 கோல் அடித்தார் மெஸ்சி

இன்டர் மயாமி வெற்றி: 2 கோல் அடித்தார் மெஸ்சி


ADDED : ஜூலை 20, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாரிசன்: மெஸ்சி 2 கோல் அடித்து கைகொடுக்க இன்டர் மயாமி அணி 5-1 என, ரெட் புல்ஸ் அணியை வீழ்த்தியது.

அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து 30வது சீசன் நடக்கிறது. ஹாரிசனில் நடந்த லீக் போட்டியில் இன்டர் மயாமி, ரெட் புல்ஸ் அணிகள் மோதின. இதில் இன்டர் மயாமி அணி 5-1 என வெற்றி பெற்றது. மயாமி அணி சார்பில் மெஸ்சி (60, 75வது நிமிடம்), டெலாஸ்கோ செகோவியா (27, 45+3வது) தலா 2, ஜோர்டி ஆல்பா ஒரு கோல் (24வது) அடித்து கைகொடுத்தனர்.

இப்போட்டியில் சகவீரர்கள் கோல் அடிக்க 2 முறை உதவினார் ('அசிசிஸ்ட்') மெஸ்சி.கடைசியாக விளையாடிய 7 போட்டியில், 6வது முறையாக 2 கோல் அடித்தார் மெஸ்சி. தவிர இவர், மேஜர் லீக் கால்பந்து வரலாற்றில், 2 ஆண்டுகளில், 35 கோல், 25 'அசிசிஸ்ட்' என அசத்திய 5வது வீரரானார்.

இன்டர் மயாமி அணிக்காக 43 போட்டியில், 39 கோல் அடித்துள்ள மெஸ்சி, கடந்த 2 ஆண்டில் (2024-25) 38 கோல் அடித்துள்ளார். ஏற்கனவே ராபி கீன் (2013-14), செபாஸ்டியன் ஜியோவின்கோ (2015-16), கார்லஸ் வேலா (2018-19), குச்சோ ஹெர்னாண்டஸ் (2023-24) இப்படி சாதித்தனர்.






      Dinamalar
      Follow us