/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை 'டிரா'
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை 'டிரா'
ADDED : ஜன 21, 2025 09:58 PM

சென்னை: சென்னை, மோகன் பகான் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா'வில் முடிந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மோகன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணியினரின் கோல் அடிக்கும் முயற்சி வீணானது. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி (0-0) 'டிரா' ஆனது.
சென்னை அணி 17 போட்டியில், 4 வெற்றி, 6 'டிரா', 7 தோல்வி என 18 புள்ளிகளுடன் 10வது இடத்தில் நீடிக்கிறது. மோகன் பகான் அணி 37 புள்ளிகளுடன் (11 வெற்றி, 4 'டிரா', 2 தோல்வி) முதலிடத்தில் தொடர்கிறது.
வரும் ஜன. 30ல் சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதுகின்றன.