/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் மோகன் பகான்
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: பைனலில் மோகன் பகான்
ADDED : ஏப் 29, 2024 12:09 AM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலுக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. அரையிறுதியில் 3-2 என ஒடிசா அணியை வென்றது.
கோல்கட்டாவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதிக்கான 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' மோகன் பகான், ஒடிசா அணிகள் மோதின. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் ஜேசன் கம்மிங்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) அசத்திய மோகன் பகான் அணிக்கு சஹால் அப்துல் சமத் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஒடிசா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 2-0 என வெற்றி பெற்றது.
முதல் சுற்றில் ஒடிசா அணி 2-1 என வெற்றி பெற்றிருந்தது. இரண்டு சுற்றுகளின் முடிவில் மோகன் பகான் அணி 3-2 (1-2, 2-0) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

