/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: ஜாம்ஷெட்பூர் 'திரில்' வெற்றி
/
கால்பந்து: ஜாம்ஷெட்பூர் 'திரில்' வெற்றி
ADDED : பிப் 27, 2026 11:34 PM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் எட்மண்ட், ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் எழுச்சி பெற்றனர். 61 வது நிமிடத்தில் நிக்கோலா கொடுத்த பந்தை பெற்ற ஸ்டீபன் எசி, கோலாக மாற்ற, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த போது, மதித் தலாலிடம் இருந்து பந்தை வாங்கினார் 84வது நிமிடம் மாற்று வீரராக களமிறங்கிய டச்சிகவா ரெய். அப்படியே கோலாக மாற்ற, ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
நேற்று பெங்களூருவில் நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

