/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து வீரர்களுக்கு சிக்கல் * பெங்களூரு அணி புதிய முடிவு
/
கால்பந்து வீரர்களுக்கு சிக்கல் * பெங்களூரு அணி புதிய முடிவு
கால்பந்து வீரர்களுக்கு சிக்கல் * பெங்களூரு அணி புதிய முடிவு
கால்பந்து வீரர்களுக்கு சிக்கல் * பெங்களூரு அணி புதிய முடிவு
ADDED : ஆக 05, 2025 10:56 PM

பெங்களூரு: பெங்களூரு கால்பந்து அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2013ல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் துவங்கப்பட்டது. இத்தொடரை நடத்த கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் (எப்.எஸ்.டி.எல்.,), 15 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது வரும் டிச. 2025ல் முடிகிறது.
ஆனால் ஏ.ஐ.எப்.எப்., மற்றும் எப்.எஸ்.டி.எல்., என இரு தரப்பிலான புதிய ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. இதனால் 12வது சீசன் (2025-26) நிறுத்தி வைக்கப்படுவதாக, எப்.எஸ்.டி.எல்., அறிவித்தது. இது எப்போது துவங்கும் என எவ்வித தெளிவான திட்டமிடலும் இல்லாமல், குழப்பமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் கால்பந்து அணியை நடத்துவதும், தொடர்ந்து தக்கவைப்பதும் கடினமான பணியாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து பெங்களூரு அணியை நடத்தி வந்தோம். தற்போது ஐ.எஸ்.எல்., தொடரின் எதிர்காலம் குறித்து எவ்வித தெளிவும் இல்லை. இதனால் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இவர்களின் குடும்பங்கள், நலன் எங்களுக்கு முக்கியமானது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என காத்திருக்கிறோம். எங்களது இளம் ஆண்கள், பெண்கள் அணிகள் இதனால் பாதிக்கப்படாது. நிச்சயமற்ற நிலை யாருக்கும் நன்மை தராது.
இந்திய கால்பந்து நலனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏ.ஐ.எப்.எப்., மற்றும் எப்.எஸ்.டி.எல்., இணைந்து, தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.