/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஐதராபாத்தை வெல்லுமா சென்னை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில் எதிர்பார்ப்பு
/
ஐதராபாத்தை வெல்லுமா சென்னை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில் எதிர்பார்ப்பு
ஐதராபாத்தை வெல்லுமா சென்னை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில் எதிர்பார்ப்பு
ஐதராபாத்தை வெல்லுமா சென்னை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில் எதிர்பார்ப்பு
ADDED : டிச 10, 2024 11:19 PM

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 13 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அடுத்த 4 இடம் பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றில் பங்கேற்கும்.
இதுவரை நடந்த போட்டி முடிவில் மோகன் பகான் அணி (10 போட்டி, 23 புள்ளி), பெங்களூரு (11ல் 23), பஞ்சாப் (9ல் 18), கோவா (10ல் 18), ஒடிசா (11ல் 16), வடகிழக்கு யுனைடெட் (11ல் 15) அணிகள் பட்டியலில் 'டாப்-6' ஆக உள்ளன.
9 வது இடம்
சென்னை அணி 11 போட்டியில் தலா 3 வெற்றி, 3 'டிரா' செய்தது. 5ல் தோற்றுள்ளது, 12 புள்ளியுடன் 9வதாக உள்ளது. தனது 12வது போட்டியில், பட்டியலில் 12வது இடத்திலுள்ள ஐதராபாத்தை (10ல் 7) எதிர்கொள்கிறது.
கடைசியாக சென்னையில் மோதிய போட்டியில் சென்னை அணி 0-2 என ஈஸ்ட் பெங்கால் அணியிடம் வீழ்ந்தது. இன்று மீண்டும் சொந்தமண்ணில் களமிறங்கும் சென்னை அணி, எளிதாக வெற்றி பெறும் என நம்பலாம். சென்னை அணி இதுவரை மொத்தம் 16 கோல் தான் அடித்துள்ளது. இதில், 6 கோல் (11 போட்டி) அடித்த வில்மர் ஜோர்டான், நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். தவிர, தலா 2 கோல் அடித்த பரூக், லுகாஸ் பிவெட்டா, 4 கோல் அடிக்க உதவிய கோன்னர் உள்ளிட்டோர் மீண்டும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.
ஐதராபாத் சார்பில் ஆலன் டி சவுசா (2 கோல்), ஆன்ரெய் ஆல்பா (2), கோல் கீப்பர் அர்ஷ்தீப் சிங் உதவலாம்.