/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
சென்னை-மும்பை 'டிரா' * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
/
சென்னை-மும்பை 'டிரா' * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
ADDED : நவ 09, 2024 11:13 PM

சென்னை: சென்னை, மும்பை மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டாவது பாதியில், 60வது நிமிடத்தில் சென்னை அணி அசத்தியது. கோன்னர் ஷீல்டு அடித்த பந்தை வாங்கிய ரியான் எட்வர்ஸ், அப்படியே தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அடுத்த 3வது நிமிடத்தில் மும்பை வீரர் வான் நீப்பிடம் இருந்து பந்தை வாங்கிய நாதன் ரோட்ரிக்ஸ், தன் பங்கிற்கு தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இப்போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
சென்னை அணி 8 போட்டியில் 3 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று, பட்டியலில் 4 வதாக உள்ளது. முதல் மூன்று இடத்தில் பெங்களூரு (17), மோகன் பகான் (13), வடகிழக்கு யுனைடெட் (12) அணிகள் உள்ளன.
1000 வது போட்டி
ஐ.எஸ்.எல்., தொடர் கடந்த 2014ல் 8 அணிகளுடன் துவக்கப்பட்டது. தற்போது 13 அணி மோதுகின்றன. நேற்று சென்னை, மும்பை அணிகள் மோதிய ஆட்டம், இத்தொடரின் 1000 வது போட்டியாக அமைந்தது.