/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
போருசியாவை வீழ்த்திய சென்னை யூத் கால்பந்தில் அபாரம்
/
போருசியாவை வீழ்த்திய சென்னை யூத் கால்பந்தில் அபாரம்
போருசியாவை வீழ்த்திய சென்னை யூத் கால்பந்தில் அபாரம்
போருசியாவை வீழ்த்திய சென்னை யூத் கால்பந்தில் அபாரம்
ADDED : அக் 14, 2024 11:02 PM

சென்னை: நார்விச் சிட்டி மினா கோப்பை (12 வயது) தொடரில் சென்னை அணி, 4-2 என ஜெர்மனியின் போருசியா டார்ட்மண்ட் அணியை வென்றது.
இங்கிலாந்தில் சர்வதேச அளவிலான நார்விச் சிட்டி மினா கோப்பை கால்பந்து தொடர் (12 வயதுக்குட்பட்ட) நடந்தது. பல்வேறு நாடுகளில் உள்ள இளம் வீரர்களை கண்டறியும் வகையில் இத்தொடர் நடந்தது.
உலகின் மிகப்பெரிய கிளப் அணிகளான செல்சியா, ஆர்சனல், லிவர்பூல், இன்டர் மிலன், போருசியா டார்ட்மன்ட் உட்பட 16 அணிகள் பங்கேற்றன.
இந்தியா சார்பில் சென்னை அணி களமிறங்கியது. குரூப் ஸ்டேஜில் இன்டர்மிலன் (0-1), லிவர்பூல் (0-2) அணிக்கு எதிராக தோற்றது. பின் 'சில்வர் ஸ்டேஜ்' பிரிவில் முதலில் பெர்முடாவை 2-0 என வென்ற சென்னை அணி, அடுத்து ஜெர்மனியின் பலம் வாய்ந்த போருசியா டார்ட்மண்ட் அணியை எதிர்கொண்டது.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. மணிப்பூர் வீரர் நெப்போலியன் லய்ஹுரம், நான்கு கோல் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார். பின் மீண்டும் பெர்முடாவை 2-0 என வீழ்த்தியது. 'சில்வர் ஸ்டேஜில்' பங்கேற்ற 4 போட்டியில் 3ல் வெற்றி பெற்றது சென்னை. இத்தொடரில் அதிக கோல் அடித்த வீரர் ஆனார் நெப்போலியன்.