மோகன் பகான்-கோவா 'டிரா' * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
மோகன் பகான்-கோவா 'டிரா' * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
ADDED : மே 09, 2026 10:29 PM

கோவா: இந்திய சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று கோவாவில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 55வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் மெக்லாரன், ஒரு கோல் அடித்தார்.
67 வது நிமிடத்தில் கோவா அணிக்கு ஹர்புடன் கைகொடுத்தார். டிராஜிக்கிடம் இருந்து பெற்ற பந்தை, வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதுவரை நடந்த போட்டி முடிவில் ஈஸ்ட் பெங்கால் (21 புள்ளி), மோகன் பகான் (10ல் 6 வெற்றி, 3 'டிரா', 1 தோல்வி), ஜாம்ஷெட்பூர் (21) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன. கோவா அணி (12ல் 5 வெற்றி, 5 'டிரா', 2 தோல்வி) 20 புள்ளியுடன், ஐந்தாவது இடம் பெற்றுள்ளது.
