/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஒடிசா முதல் வெற்றி * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
/
ஒடிசா முதல் வெற்றி * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
ADDED : செப் 28, 2024 11:13 PM

புவனேஸ்வர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் முதல் வெற்றி பெற்றது ஒடிசா அணி.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
போட்டியின் 20 வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ஹியுகோ பவுமஸ், பந்தை டீகோ மவுரிசியோவுக்கு கொடுத்தார். இதைப் பெற்ற மவுரிசியோ, இடது காலால் அடித்து கோலாக மாற்றினார். 42வது நிமிடத்தில் மீண்டும் ஹியுகோ பவுமஸ், பந்தை ஜாம்ஷெட்பூர் கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார்.
இதை அங்கிருந்த ஒடிசா வீரர் மோர்டடா, தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார். போட்டியின் 62 வது நிமிடம் ஒடிசா வீரர் மோர்டடா, 'சேம் சைடு' கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். முடிவில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் 3 போட்டியில் (2 தோல்வி), ஒடிசா பெற்ற முதல் வெற்றி இது. ஜாம்ஷெட்பூர் (3ல் 2 வெற்றி) அடைந்த முதல் தோல்வியானது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு அணி, 3-0 என்ற **** கோல் கணக்கில் மோகன் பகானை சாய்த்தது.
சுனில் செத்ரி '64'
நேற்று பெனால்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்த பெங்களூரு அணியின் சுனில் செத்ரி, ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர் ஆனார். இவர் இதுவரை 158 போட்டியில் 64 கோல் அடித்துள்ளார். தவிர, சக வீரர்கள் கோல் அடிக்க 11 முறை உதவினார். இதற்கு முன் ஆக்பசே 63 கோல் அடித்திருந்தார்.