ADDED : மே 20, 2026 10:46 PM

பிரான்சில், 1938ல் (ஜூன் 4-19) உலக கோப்பை கால்பந்து 3வது சீசன் நடந்தது. ஐரோப்பிய கண்டத்தில் மீண்டும் போட்டிகள் நடப்பதை விரும்பாத தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே அணிகள் இத்தொடரை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக, ஸ்பெயின் அணியும் பங்கேற்கவில்லை. மொத்தம் 15 அணிகள் பங்கேற்றன.
தொடரை நடத்திய பிரான்ஸ் சாதிக்கவில்லை. காலிறுதியில் இத்தாலி அணியிடம் தோற்றது. ஆரம்பம் முதல் பிரேசில் அணி அசத்தியது. 'கருப்பு தங்கம்' என அழைக்கப்பட்ட லியானி டாசின் ஆட்டம், பிரேசிலுக்கு பக்கபலமாக அமைந்தது. இத்தாலிக்கு எதிரான அரையிறுதியில், இவருக்கு ஓய்வு கொடுத்து தவறு செய்தார் பிரேசில் பயிற்சியாளர் பிமன்டா. இதனால் பிரேசில் தோல்வி அடைந்தது. இத்தாலி பைனலுக்கு முன்னேறியது.
மீண்டும் சாம்பியன்: மற்றொரு அரையிறுதியில் சுவீடனை வீழ்த்திய ஹங்கேரி அணி, பைனலுக்கு முன்னேறியது. பைனலில் இத்தாலி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி கோப்பை வென்றது. இதன்மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இத்தொடரில் மூன்றாவது இடத்தை பிரேசில் கைப்பற்றியது.
'எக்ஸ்டிரா டைம்'
ஐந்து முறை
உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், அதிக தொடர்களில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் லோதர் மத்தாயஸ் (1982, 86, 90, 94, 98), அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (2006, 10, 14, 18, 22), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (2006, 10, 14, 18, 22) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மூவரும் தலா 5 சீனில் களமிறங்கினர்.
