ADDED : ஜூலை 01, 2026 11:14 PM

டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-32' போட்டியில் நார்வே அணி 2-1 என, ஐவரி கோஸ்ட் அணியை வீழ்த்தியது. உலக கோப்பை வரலாற்றில் 'நாக்-அவுட்' போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த நார்வே அணிக்கு, எர்லிங் ஹாலண்ட் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.
இது, சர்வதேச கால்பந்து அரங்கில் எர்லிங் ஹாலண்ட் அடித்த 60வது கோல் ஆனது. இதனை 53 போட்டியில் எட்டினார் ஹாலண்ட். தவிர இவர், 46 போட்டியில், 50 கோல் அடித்திருந்தார். இதன்மூலம் குறைந்த போட்டியில், 60 சர்வதேச கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றார் ஹாலண்ட். இதற்கு முன், ஹங்கேரியின் பெரெங்க் புஸ்காஸ், 63 போட்டியில் இம்மைல்கல்லை எட்டியிருந்தார்.
அடுத்த மூன்று இடங்களில் பிரான்சின் எம்பாப்வே (101 போட்டி), அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (122), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (130) உள்ளனர்.
* ஹாலண்ட், கடைசியாக விளையாடிய 13 சர்வதேச போட்டிகளில், 25 கோல் அடித்துள்ளார்.
